தந்தையை அமர வைத்து ஷேவிங் செய்துவிடும் காமெடி நடிகர் சதிஷ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
தந்தையை அமர வைத்து ஷேவிங் செய்துவிடும் காமெடி நடிகர் சதிஷ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் சினிமா பிரபலங்களும் தங்கள் வீடுகளிலையே இருக்கும் நிலையில் அவ்வப்போது சில வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது தந்தையை அமரவைத்து அவருக்கு ஷேவிங் செய்துவிடும் வீடியோ ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
🤓🤓🤓 pic.twitter.com/6jeRC3mgFx
— Sathish (@actorsathish) April 21, 2020