சினிமா

சர்க்கார் படத்தின் சிம்டாங்கரான் பாடல் புதிய சாதனை

Summary:

Sarkkar-pada-padalin-youtube-sathanai

தல தளபதி ரசிகர்கள் இவர்களின் படங்களின் டீசர் அல்லது பாடல் வெளியாக்கினாலே ரசிகர்கள் படத்தின் வெற்றியை ஸ்டார்ட் செய்து விடுவார்கள். அதேபோல் இப்பொழுது நேற்று வெளியான சர்க்கார் படத்தின் சிம்டாங்கரான் பாடல் 2 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்ஸ் பெற்று புதிய சாதனையை பெற்றது. 

இதற்கு முன் தல அஜித் நடித்த விவேகம் படத்தின் சர்வைவா பாடல் இதுவரையிலும் 3 லட்சம் லைக்ஸ் பெற்று முதல் இடத்தில் இருந்தது. இப்போது தல அஜித் படத்தின் பாடல் சாதனையை தளபதி விஜய் படத்தின் பாடல் 2 மணி நேரத்திலேயே தூக்கி அடித்து முதல் இடத்தை பிடித்தது. ரசிகர்கள் இன்னும் பல கோடி லைக்ஸ் தெறிக்கவிடுவோம் என்று கூறுகிறார்கள்.

இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்கள் இப்போதே தீபாவளியை கொண்டாட ஆரமித்து விட்டார்கள். இந்த படம் தளபதியின் 62 வது படமாகும்.

இது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்களுக்கு பல உற்சாகமான செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று சர்க்கார் பாடல் வெளியானது. இன்று சர்க்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தளபதியின் மகன் சஞ்சய் நடித்த ஒரு குறும்படத்தின் வீடியோவும் வெளியாகி தளபதி ரசிகர்களுக்கு மேலும் மேலும் பல மகிழ்ச்சியை கொடுத்துக்கொண்டே வருகிறது. 


Advertisement