சினிமா

நாளை வெளியாக இருந்த சர்கார் ரகசியம் கசிந்தது..! அது என்ன?

Summary:

sarkar-single-sep24th-onwards

இளையதளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து எடுக்கும் படம் தான் சர்க்கார். இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் செயல்படுகிறார். 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனம் சர்க்கார் படம் பற்றிய தகவல் ஒன்றை நாளை வெளியிட போவதாகவும் அதுவும் அது சர்க்கார் படம் பற்றிய முக்கிய அறிவிப்பாக இருக்கும் எனவும் வெளியிட்டது. 

இந்நிலையில் இன்றே அந்த அறிவிப்பு தற்போது கசிந்துள்ளது. அது சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது என சொல்லவே அந்த அறிவிப்பு என்ற தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அந்த தகவலை தான் நாளை அறிவிக்க இருந்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வேறு அறிவிப்பாக கூட இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாளை தான் தெரியும் என்ன அறிவிப்பு என்று ஒரு சிலர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். 


Advertisement