சர்காரில் இந்த காட்சிகள் மரண மாஸாக இருக்குமாம்! வெளியான புதிய தகவல்!
சர்காரில் இந்த காட்சிகள் மரண மாஸாக இருக்குமாம்! வெளியான புதிய தகவல்!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் நாளை காலை வெளியாகுகிறது சர்க்கார் திரைப்படம். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் சர்க்கார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் சர்க்கார் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் அவ்வப்போது சன் தொலைக்காட்சியும் விதவிதமான ப்ரோமோக்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சர்க்கார் படத்தில் உள்ள ஒரு மாஸ் சண்டை காட்சி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
படத்தில் நடிகர் விஜய் அரசியல்வாதியான ராதாரவியை எதிர்ப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் சட்டசபைக்குள் புகுந்து சண்டைபோடும் காட்சிகளும் மிகவும் மாஸாக இருக்குமாம்.
அனேகமாக சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் நடிகர் ராதாரவி ‘போட்றா அவன’ என்று சொன்னதும் நடிகர் விஜய் ஒருவரை அடித்துவிட்டு ‘போட்டேன்னா’ என்று கூறுவார். ஒருவேளை அந்த ஆக்ஷன் காட்சி சட்ட சபையில் நடப்பது போல இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.