பிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவியை பார்த்திருக்கீங்களா?

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
ஒவ்வொரு சீசனிலும் சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் என ஏதாவது ஒரு வில்லங்கம் அரங்கேறி வருகிறது. இதில், போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் சர்ச்சையான முறையில் அண்மையில் வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மனைவி மற்றும் குழந்தையுடன் சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சென்றுள்ளார். சாண்டியின் அழகிய குழந்தையையும் அவர் தூக்கி வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.