தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
பிரபல முன்னணி நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் நேர்ந்த துக்கம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்! திரையுலம் இரங்கல்!

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி பிரபலமாக இருந்தவர் பழம்பெரும் இயக்குனர் ராஜ் அந்தோணி பாஸ்கர் என்ற ஏ.பி.ராஜ். இவர் மலையாளத்தில் 65 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். மேலும் தமிழிலும் கைநிறைய காசு, துள்ளி ஓடும் புள்ளிமான் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஆவார். சரண்யா தமிழில் ஏராளமான திரைப்படங்களில் பிரபல நடிகர்களின் அம்மாவாக நடித்துள்ளார். மேலும் ஏ.பி.ராஜ்க்கு ஜெயபால், மனோஜ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் 95 வயது நிறைந்த இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து அவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். மேலும் அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இறுதி சடங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.பி.ராஜ் அவர்களின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.