சினிமா

விஷம் குடித்தாரா பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Santhosh narayanan drunk poison at school age

கபாலி, காலா, வடசென்னை, பைரவா போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர் பிரபல இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் இசை அமைத்த பெரும்பாலான பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு பிசியாக இசை அமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.

இந்நிலையில் பள்ளி விழா ஒன்றிற்கு சென்றிருந்த சந்தோஷ் நாராயணன் தனது பள்ளி வயது சம்பவங்கள் குறித்து பள்ளி மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். நான் பள்ளியில் படிக்கும் நேரத்தில் பரிட்சை லீவு முடிந்து அசைன்மெண்ட் எழுதி வரச்சொன்னார்கள். லீவ் முடிய ஒரு நாள் இருக்கும் போது என் ப்ரண்ட் எழுதிட்டான். நான் எழுதலை. பள்ளிக்கு போன டீச்சர் அடிப்பாங்கனு பயந்து வீட்டில் விஷத்தை எடுத்து குடிச்சிட்டேன்.

எங்க அம்மாகிட்ட போய் நான் சாகப்போறேனு சொன்னேன். அவங்க பெருசா எடுத்துக்கலை. அன்னைக்கு தூங்கி அடுத்தநாள் எந்திரிச்சிட்டேன். ஆனா நான் சாகலை. பள்ளிக்கு போகும் போது டீச்சரும் அந்த அசைன்மெண்ட் கேக்கவே இல்ல.

அந்த விஷத்ல என்ன கலப்படம் இருந்துச்சோ தெரில நல்லவேளை நா பொழச்சுடன். ஒன்னுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு போய் விஷம் குடிச்சதை நினைச்சு பீல் பண்ணிருக்கேன். பசங்க கூட சொல்லி சிரிச்சிருக்கேன்.

எனவே குழந்தைங்க நீங்க சின்ன சின்ன விஷயங்களுக்கு தவறான முடிவெடுக்காதீங்க. உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை பாலோ பண்ணுங்க என்று கூறியுள்ளார்.


Advertisement