சினிமா

ஆஹா.. நீங்க மியூசிக்ல மட்டுமில்ல... இதுலயும் பின்றீங்களே ஜி.! புகழ்ந்து தள்ளிய சியான் 60 இயக்குநர்..! வேற லெவல் வீடியோ!

Summary:

தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும

தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்கும் திரைப்படம் சியான் 60. மேலும் இத்திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் நடிகை சிம்ரன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர் இந்த திரைப்படத்தை கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சியான் 60  படத்திற்கான இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், பறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பகிர்ந்த இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். "ஆஹா.. பின்றீங்களே ஜி" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement