சினிமா

அதுக்கு பூனையே பரவாயில்ல! சாந்தனுவை மோசமாக கிண்டல் செய்த நெட்டிசன்கள்! அதற்கு அவரது பதிலடியை பார்த்தீர்களா!

Summary:

மாஸ்டர் படத்தில் வந்த பூனையே பரவாயில்லை என்று சாந்தனுவை கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம்  மாஸ்டர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம்தான் ரசிகர்களால் பெரும் அளவில் ரசிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் சில நிமிடங்களே வந்த சாந்தனுவின் கதாபாத்திரத்தை, மாஸ்டர் படத்தில் வந்த பூனை கூட அதிக காட்சிகள் வந்தது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் சாந்தனு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சீனோ, ஒரு முழு படமோ  இப்படிபட்ட ஒரு மிகப்பெரும் படத்தில் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு சாதனைதான். அதை நினைத்து நான் பெருமைபடுகிறேன். இந்த படம் மூலமாக நல்ல நண்பர்களை பெற்றுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement