பெண்ணுக்காக காவலரை அடிக்கசென்ற சந்தானம்?.. வெளியான பரபரப்பு வீடியோ..! கொண்டாடும் ரசிகர்கள்..!!

பெண்ணுக்காக காவலரை அடிக்கசென்ற சந்தானம்?.. வெளியான பரபரப்பு வீடியோ..! கொண்டாடும் ரசிகர்கள்..!!


santhanam new movie update

கோலிவுட் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர்தான் சந்தானம். இவர் தற்போது தனது காமெடி கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்து முழு நேர கதாநாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ1 போன்ற திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியளித்துள்ளது. மேலும் சில படங்கள் வெளியாகாமல் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் குளுகுளு. இந்த படத்தை ஆடை மற்றும் மேயாத மான் பட இயக்குனர் ரத்தினகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட இருக்கிறது. 

இதன் காரணமாகவே இப்படம் மக்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியில் தான் முடிந்துள்ளது. இதற்கு உதாரனமாக சில காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சந்தானம் தனது வித்தியாசமான நடிப்பை காட்டியுள்ளார்.

அதில், ஒரு பிச்சை எடுக்கும் பெண் தன் குழந்தையுடன் பிச்சை எடுக்க வருகிறார். அப்போது சந்தானம் அவருக்கு சாப்பாட்டை வழங்கிய நிலையில், ஒரு காவலர் அந்த சாப்பாட்டை பிடுங்கி தள்ளிவிட்டு பெண்ணை உதாசீனப்படுத்துகிறார். 

இதனை பார்த்துக் கொண்டிருந்த சந்தானம் பெண்ணிடம் சென்று ஆறுதல் கூற, என்னை தாக்கிய போலீசை திருப்பி அடிக்க முடியுமா? என்று சந்தானத்திடம் பெண் கேட்கிறார். அதன் பின் சந்தானம் என்ன செய்தார்? என்பதை சஸ்பென்ஸ் வைத்து முடித்துள்ளனர். 

அதன்பின் சந்தானம் அடிப்பாரா? இல்லையா? என்பதை விட அவர் எடுத்த வைத்த முதல் அடிக்கு ரசிகர்கள் மத்தியில் தியேட்டரில் பெரும் ஆரவாரம் இருக்கும் என்பது உறுதி. இந்த படத்தில் வழக்கமான சந்தானம் படபாணியில் 'பஞ்ச் வசனம்' எதுவும் இல்லாமல், நடிப்பின் மூலம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளார் என்று கமெண்டில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.