தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத மாமா சஞ்சீவ்விற்காக, அவரது அக்கா மகள் வெளியிட்ட உருக்கமான பதிவு!
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகர் சஞ்சீவ். அவர் அண்மையில் டாஸ்க் ஒன்றில் தான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பகிர்ந்திருந்தார். அப்பொழுது அவர் தனது அக்கா நடிகை சிந்துவின் மறைவு குறித்தும், அதற்கு பின் அவரது மகள் ஸ்ரேயாவை தனது மகளாக வளர்த்து திருமணம் செய்து வைத்தது குறித்தும் கண்கலங்கி பேசினார்.
சஞ்சீவினின் அக்கா மகளை திருமணம் செய்து கொண்டவர் அஸ்வின் ராம். தற்போது ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படத்தின் இயக்குனர். இவர்களது உறவு குறித்து சஞ்சீவ் கடந்த வாரம் பட புரமோஷனுக்காக படக்குழு பிக்பாஸ் வந்தபோதே தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சஞ்சீவ்வின் அக்கா சிந்துவின் மகள் ஸ்ரேயா, தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், என் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான தருணம் இது. இதற்காக நான் 12 ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டுகொண்டிருந்தேன். நான் காதலிப்பது குறித்து எனது மாமா சஞ்சீவ்விற்கு தெரிய வந்தபோது, அவர் என்னை மிகவும் நம்பினார். அதேபோல அஸ்வினும் பெருமளவில் சாதிப்பார் என நம்பினார். என்னை பெற்றவர்களை விட அதிகமான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். எப்பொழுதும் நானும் அஸ்வினும் அவர் பெருமைபடும்படி நடந்துகொள்வோம்.
அஸ்வின் படத்தின் டிரைலர் வெளியாகுவதை சஞ்சீவ் மாமா பார்க்க மாட்டாரே என நான் கவலையாக இருந்தேன். ஆனால் இந்த உலகமே பார்க்கும் வகையில் ஒரு ஜாம்பவான் முன்பு இந்த படத்தின் ட்ரெய்லரை அவர் கண்டுள்ளார். இதுக்குறித்து சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. கண்ணீர் வருகிறது. எப்போதெல்லாம் எனக்குனு குடும்பம் இல்லையே என நான் வருத்தப்படுகிறேனோ அப்போதெல்லாம் அதை தவறு என நீங்கள் உணர்த்துகிறீர்கள். உங்களால் இதுவரை நான் எனக்கு பெற்றோர்கள் இல்லையே என கவலைப்பட்டதில்லை. என் குடும்பமே எனது பலம் என்று தெரிவித்துள்ளார்.