சினிமா

விரைவில் படமாகிறது சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு! ஹீரோயின் யார் தெரியுமா?

Summary:

Saniya mirza bio pic confirmed

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது தற்போது ட்ரெண்டாகிவருகிறது, இதற்கு முன்னர் தல தோனியின் வாழக்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் மாரும் வெற்றிபெற்றது. அதேபோல சச்சின் டெண்டுல்கர், மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டு மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழக்கையும் படமாக இருக்கிறது. இதனை சானியா மிர்சா உறுதிபடுத்தியுள்ளார். சானியா மிர்சாவின் வாழ்க்கை போன்றே  பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படங்களும் உருவாகி வருகிறது.

https://cdn.tamilspark.com/media/16732jha-Sania-Mirza_AFP_0.jpg

சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், சானியா மிர்சாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

சானியா மிர்ஸா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகைகள் ஆலியா பாட், பரினீதி சோப்ரா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறித்து.

https://cdn.tamilspark.com/media/16732jha-69971.jpg


Advertisement