சினிமா

சண்டக்கோழி படத்தில் விஷாலுக்கு பதில் இந்த மாஸ் நடிகர்தான் நடிக்க இருந்தாராம்! ஆனால்?

Summary:

Sandakozhi movie unknown facts and casting list

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது  இதில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக சண்டக்கோழி 2 படம் தற்போது வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சண்டக்கோழி படம் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் 10 வருடங்களுக்கு முன்பு இரு பெரிய நடிகர்களுக்கு சொல்லப்பட்ட சண்டக்கோழி கதை அவர்கள் அதை மறுத்ததால் அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது எனவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சண்டக்கோழி 2 படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்தது. மேலும் படம் குறித்து விஷால் பேசுகையில், “எனது படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படம் சண்டக்கோழி 2 தான். நானே தயாரிப்பாளராகவும் உள்ளதால் எங்கு எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். மதுரையி சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தாலும் ஊர் திருவிழாக் காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அங்கு மட்டும் இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது என்று கூறியுள்ளார்.

மேலும் 10 வருடங்களுக்கு முன்னர் சண்டக்கோழி படம் இன்றைய மாஸ் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இருவருக்கும் சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் இதில் நடிக்க மறுத்ததால் சண்டக்கோழி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

ஒருவேளை தளபதி விஜய் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடுங்கள்.


Advertisement