அட.. என்னம்மா ஹேர்ஸ்டைல் இது! நியூ லுக்கில் அடையாளமே தெரியாமல் மாறிய பிக்பாஸ் சம்யுக்தா! வைரலாகும் புகைப்படங்கள்!!Samyuktha newlook photos viral

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் பிரபல தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி ஆவார். சம்யுக்தாவிற்கு ஒரு மகன் உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சம்யுக்தா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த துக்ளக் தர்பார் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் தற்போதும் தொடர்ந்து தொலைக்காட்சி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கியூட்டான கவுன் அணிந்து வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.