சினிமா

என்னது! பிக்பாஸ் சம்யுக்தா சன் டிவியில் அதுவும் இந்த சீரியலில் நடித்துள்ளாரா?? வெளியான மாஸ் தகவல்!

Summary:

பிக்பாஸ் போட்டியாளர் சம்யுக்தா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியலில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தற்போது மூன்று நாட்கள் கடந்துள்ளது.இதில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான சில பிரபலங்கள் போட்டியாளராக  கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில புதுமுகங்களும் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர். சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

மேலும் சம்யுக்தா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின்  சந்திரகுமாரி சீரியலில் ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு மலையாளத்தில் ஷாஜி என்.கருண் இயக்கத்தில் வெளிவந்த OOLU என்ற ஃபேண்டசி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


Advertisement