13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
நேரடியாக சன் டிவியில் ரிலீசாகும் மற்றொரு படம்! அதுவும் எந்த டாப் ஹீரோவோட படம்னு பார்த்தீர்களா!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம் சிவா. அதனைத் தொடர்ந்து அவர் பொறி, யோகி, சீடன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது ஏறக்குறைய 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளை யானை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் ஹீரோவாக சமுத்திரக்கனி மற்றும் கதாநாயகியாக ஆத்மியா நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெள்ளை யானை திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சன் டிவி நிறுவனம் படக்குழுவினரிடம் பேசி படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ஏலே திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.