அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் நடிகர் சமுத்திரக்கனி! வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக உள்ளது.
இத்திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இந்த படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக்கடத்தல் பற்றிய கதையை மையமாக கொண்டது என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.
-paltp.jpeg)
ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் அவரைத் தொடர்ந்து வில்லனாக நடிக்கவிருப்பதாக பாபி சிம்ஹா மற்றும் மாதவன் பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் தற்போது புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சமுத்திரக்கனி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சமுத்திரகனி ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் இணைந்து அல வைகுண்டபுரம்லு என்ற படத்தில் நடித்துள்ளார்.