சினிமா

கர்ப்பமான நிலையில் வெளியான புகைப்படம்! கேலி செய்தவர்களின் மூக்கை உடைத்த வெடி நாயகியின் ஒத்த கேள்வி .!

Summary:

sameera answered who tease her based pregnancy

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. மேலும் அவர் விஷாலுடன் வெடி படத்தில் நடித்துள்ளார். 

தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த சில வருடங்களுக்கு முன் அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.இதனைத்தொடர்ந்து சமீராரெட்டி சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

sameera reddy க்கான பட முடிவு

இந்நிலையில் சமீரா ரெட்டி  இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருவுற்றநிலையில் உள்ள புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் இந்தப் புகைப்படங்களை வைத்தும், அவரது உடலமைப்பைக் கிண்டல் செய்தும் நெட்டிசன்கள் சிலர்  பதிவுகளும், மீம்ஸ்களும் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமீரா ரெட்டி இதுகுறித்து பேசியுள்ளார். “உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களைப் பார்த்து ஒன்று  கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று அவரிடமே கேளுங்கள்.

உடலமைப்பைப் பற்றி விமர்சிப்பது தவறானது, அவமதிப்பானது. என் உடலமைப்பு குறித்தும் கருவுற்றது குறித்தும் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.


 


Advertisement