சினிமா

தனது முன்னாள் காதலனை பிரிந்தது ஏன்? நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்திறந்த சமந்தா!

Summary:

Samantha talk about her first love

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. மேலும் இவர் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக  உள்ளார். 

 இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

 நடிகை சமந்தா திருமணத்திற்கு முன்பு பிரபல நடிகரை காதலித்து, பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதல் குறித்தும், தனது கணவர் குறித்தும் பேசியுள்ளார். 

அப்பொழுது சமந்தா, நான் முன்னாள் காதலரை திருமணம் செய்திருந்தால், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நானும் நடிகை சாவித்ரி போல் பெரும் பிரச்சினையில் சிக்கி,  தவித்திருப்பேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்டேன். அந்த காதல் நல்லது அல்ல என்பதை உணர்ந்து பிரிந்து விட்டேன். நாக சைதன்யா போன்ற கணவர் கிடைப்பதற்கு நான் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.


Advertisement