அதனால நான் இறந்துருவேன்னு நினைச்சேன்! ஆனால்.. மனம் உருகி சமந்தா கூறியதை பார்த்தீங்களா!!



samantha-talk-about-her-divorce

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் அழகிய நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தாங்கள் பிரிய போவதாக இருவரும் அண்மையில் அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சமந்தா படங்கள், சுற்றுலா செல்வது என தன்னை மிகவும் பிஸியாக வைத்துகொண்டார்.

samantha

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்றே நினைத்தேன். விவாகரத்து பிரிவால், மிகவும் மனம் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது இவ்வளவு வலிமையானவாளாக இருக்க முடியும் என்று நினைக்கவில்லை.

அவ்வாறு இருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களது வாழ்க்கையில் ஒரு மோசமான நாள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படாதீர்கள். அதனை நீங்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டாலே எல்லாமே எளிதாகி விடும் என அவர் கூறியுள்ளார்.