சினிமா

அம்மாடியோவ்.. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இவ்வளவு சம்பளமா! வேற லெவலில் கெத்து காட்டும் நடிகை சமந்தா!!

Summary:

அம்மாடியோவ்.. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இவ்வளவு சம்பளமா! கெத்து காட்டும் நடிகை சமந்தா!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் நட்சத்திர இளம்காதல் ஜோடிகளாக வலம் வந்தநிலையில் அவர் அண்மையில் தனது கணவரை விவாகரத்து செய்து பிரியவிருப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமந்தா தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில், உருவாகும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை சமந்தாவுக்கு 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement