புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அமோக விருந்து!



samantha new plan


தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் நடிகை சமந்தா தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

samantha

இந்த படம் குறித்து சமந்தா கூறுகையில், சினிமாவில் வெற்றி தோல்வியை சந்தித்து இருக்கிறேன். இப்போது தரமான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற அக்கறை வந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். 10 வருடங்கள் தாண்டிய பிறகும் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைதான் தேர்வு செய்ய வேண்டும். சினிமாவில் கதை மிகவும் முக்கியம். எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும். நான் தற்போது நடித்து வரும் ‘ஓ பேபி’ கதை அதுமாதிரி இருக்கும். விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.