மீண்டும் இணைந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா.? இன்ஸ்டாகிராம் ஏற்பட்ட குழப்பம்.!

மீண்டும் இணைந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா.? இன்ஸ்டாகிராம் ஏற்பட்ட குழப்பம்.!


Samantha instagram photos

தென்னிந்திய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

samantha

இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நாக சைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்ய பெண் தேடி வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன. தொடர்ந்து நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

விவகாரத்திற்கு பிறகு, சமந்தாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக தற்போது சமந்தா சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த "குஷி" படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

samantha

இந்நிலையில், சமந்தாவின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், யாரும் பார்க்க முடியாதபடி இருந்த சில புகைப்படங்கள் தற்போது அனைவரும் பார்க்கும்படி மாற்றப்பட்டுள்ளது. அவை சமந்தா நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என்பதால் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.