சினிமா

அடுத்த படத்தில் நடிகை சமந்தா இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா? வெளியான புதிய தகவல்!

Summary:

samantha going to act as disabled women in next movie

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா,தனுஷ், ஜீவா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏரளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.

மேலும் சமந்தா சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், ரங்கஸ்தலம், ஓ பேபி உள்ளிட்ட பல படங்களில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமந்தா அடுத்ததாக அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகும் திகில்  படமொன்றில் வாய்பேச முடியாத, காது கேட்காத பெண்ணாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அவர் பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் தயாராகிறது. 


Advertisement