கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
ப்பா.. செம கெத்துதான்! டூப் போடாமலே சண்டை போட்ட நடிகை சமந்தா! வீடியோவைக் கண்டு புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!!

கடந்த 2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பாராட்டை பெற்ற வெப்தொடர் தி ஃபேமிலி மேன். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இத்தொடரை ராஜ் & டி.கே ஆகியோர் இயக்கியிருந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். அந்த வெப் தொடர் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா, சீமான் போன்றோர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இது ஒருபுறமிருக்க தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனைப் பகிர்ந்து நடிகை சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் தான் டூப் போடாமலே அனைத்து சண்டைக்காட்சியிலும் நடித்ததாகவும், தனக்கு ஊக்கமளித்து பயிற்சி கொடுத்த ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென்னுக்கு நன்றியும் கூறி, தான் சண்டை போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பல நடிகைகள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.