நோயுடன் போராடும் சமந்தா... போன் செய்து நாக சைதன்யா என்ன பேசியுள்ளார் பாருங்கள்...Samantha ex husband speak to Samantha

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இன்று இளைஞர்களின் கனவு கன்னியாகவும் உள்ளார். சமீபத்தில் வெளியான "உம் சொல்றியா" என்ற பாடலுக்கு நடனமாடி பட்டித் தொட்டி எங்கும் தெறிக்க விட்டவர்.

சமந்தா நடித்து இருக்கும் யசோதா திரைப்படம் வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திரைக்கு வர உள்ளது. எனவே யசோதா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.

samantha

மயோசிடிஸ் என்னும் அரிய வகை தோல் நோயுடன் போராடும் சமந்தாவை விளம்பர நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். மேலும் இது குறித்து சமந்தா கூறுகையில் மயோசிடிஸ் என்னும் நோயுடன் போராடுவது எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நாளாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா அவருடன் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா சமந்தாவை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.