நடிகை சமந்தா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.? வெளியான புகைப்படம்!!

நடிகை சமந்தா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.? வெளியான புகைப்படம்!!


Samantha dubbed for her new movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் சமீபத்தில் மயோசிட்டிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். 

நடிகை சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நோயுடன் போராடி வரும் சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.  

தற்போது சிகிச்சைக்காக சமந்தா தென்கொரியா சென்று விட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சையில் இருந்த போது சமந்தா ஓய்வு எடுக்காமல் சகுந்தலம் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.