தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
விவாகரத்துக்குப் பின்.. செம கலக்கலாக தீபாவளி கொண்டாடிய நடிகை சமந்தா! அதுவும் யாருடன் பார்த்தீங்களா!!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.இவரது கணவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.
இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனநிலையில் அண்மையில் இருவரும் தாங்கள் விவாகரத்து செய்து பிரியவிருப்பதாக அறிவித்தனர். இவர்களது பிரிவு செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பின்னர் சமந்தா குறித்த அவதூறான வதந்திகளும் இணையத்தில் பரவதுவங்கியது. இந்நிலையில் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா விளக்கம் அளித்திருந்தார்.
தொடர்ந்து அவர் தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதற்காக ஆன்மிக சுற்றுலா, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு வந்த தீபாவளி பண்டிகையை சமந்தா
தன்னுடைய தோழி ஷில்பா ரெட்டி மற்றும் ராம் சரண் மனைவி உபாசனா ஆகியோருடனும் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். இந்த தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது.