தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
என்னது.! சமந்தா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக போறாங்களா..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் சமந்தா.
மேலும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்தானது. இதன் பின்னர் மயோசைட்டிஸ் எனும் நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா.
இதன்படி சிறிது காலமாக திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் சமந்தா அடிக்கடி போட்டோ ஷூட்கள் செய்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
இது போன்ற நிலையில், சமூக சேவையில் ஆர்வம் அதிகம் உள்ள சமந்தா தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இச்செய்தி அறிந்து ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.