சினிமா

நடிகை சமந்தாவின் ஜிம் வீடியோ பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வீடியோ உள்ளே.

Summary:

Samantha Akkineni New fitness video is setting fire on Internet

நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.  பானா காத்தாடி  திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்தார் நடிகை சமந்தா.  அதன்பிறகு தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழி படங்களில் ஒப்பந்தம் ஆனார்.

தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்த கத்தி, மெர்சல் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பயங்கர பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.

தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை சமந்தா சமீபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மெர்சலாகிவருகின்றனர். இதோ அந்த வீடியோ.


Advertisement