நடிகை சமந்தா எடுத்துல புதிய அவதாரம்! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!



samantha-acting-as-72-years-old-in-her-next-project

பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை சமந்தா.

அதை தொடர்ந்து சூர்யா, விக்ரம், விஜய் என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் சமந்தா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானியுடன் சமந்தா இணைந்து நடித்த நான் ஈ திரைப்படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கியது. அதை தொடர்ந்து சமந்தா விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

samantha

அதுமட்டும் இல்லமால் தனி ஒரு நடிகையாக U Turn படத்திலும் வெற்றிபெற்றுவிட்டார் நடிகை சமந்தா. தற்போது தனது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு கதை கேட்ட சமந்தா அதில் ஒரு கதை மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால் அந்த படத்தில் 72 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளாராம் சமந்தா.