சமந்தாவுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! கோபமாகி சமந்தா கூறிய பதில்! இதுதான் காரணமா!

சமந்தாவுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! கோபமாகி சமந்தா கூறிய பதில்! இதுதான் காரணமா!


Samantha

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவைகாதலித்து வந்ததை தொடர்ந்து பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாத சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கணவருடன் இணைந்தும் நடித்து வருகிறார். 

samantha

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா ஜானு பட வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு படி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு சமந்தா நடப்பது என்றால் ஒழுங்காக நட என்று கோபமாக கூறியுள்ளார். 

மேலும் இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் இங்கு வேண்டாம் என கடுமையாக கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஏன் கிறிஸ்துவ ஆலயத்திற்கு செல்லாமல் திருப்பதிக்கு வருக்கிறீர்கள் பப்ளிசிட்டியா என கிண்டல் செய்து வருகின்றனர்.