சினிமா

எனக்காக பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் நன்றி! பாடகர் எஸ்.பி.பிக்காக பிரபல பாலிவுட் நடிகர் உருக்கமாக வெளியிட்ட பதிவு!

Summary:

Salmankhan wishes for spb to recovery

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் நாளடைவில் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.  அதனை தொடர்ந்து அவர் பேச தொடங்கியுள்ளார்.சுயநினைவு திரும்பிவிட்டது. உணவு எடுத்துக் கொள்கிறார். கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என தகவல்கள் வெளிவந்தது. ஆனால் நேற்று திடீரென பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை  மோசமாகி மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதிகபட்ச உயிர்காக்கும் மருத்துவ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதனால் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் பலரும் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து வலிமையுடனுடம், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என இதயபூர்வமாக வாழ்த்து தெரிவிக்கிறேன். எனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி. லவ் யூ சார் என பதிவிட்டுள்ளார்.


Advertisement