சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா! அதிர்ச்சி கொடுக்கும் பிரபல நடிகர்

Summary:

Salary for big boss 13 to salmankhan

ஹிந்தியில் அடுத்து துவங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 13யை தொகுத்து வழங்க வாரத்திற்கு 31 கோடி வீதம் மொத்தம் 403 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. தமிழில் கமல்ஹாசன் போல ஹிந்தியில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 12 சீசன்கள் நிறைவுபெற்ற நிலையில் சீசன் 13 வரும் செப்டம்பர் மாதம் துவங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெறுகிறது. இந்த சீசனுக்கான பிக்பாஸ் இல்லம் வழக்கம் போல லொனோவாவில் இல்லாமல் மும்பையிலேயே உருவாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

மேலும் இந்த சீசனையும் சல்மான் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ஒரு வாரம் 31 கோடி ரூபாய் வீதம் 13 வாரங்களுக்கு 403 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். 


Advertisement