மூன்று நாட்களில் ரூ.402 கோடி வசூல் செய்த சலார் திரைப்படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!



Salar movie 3 day collection 402 crores

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சலார். இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சலார் திரைப்படம் உலகளவில் 3 நாளில் ரூ.402 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் ரூ.170 கோடி, இரண்டாவது நாளில் ரூ.120 கோடி என இரண்டு நாட்களில் ரூ.295 கோடி வசூல் செய்திருந்தது.

தற்போது மூன்றாவது நாளில் மொத்தமாக ரூ.402 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மூன்றாவது நாளில் இப்படம் ரூ.100 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.