சலார் படத்தின் முதல் பாடல் ஆகாச சூரியன் நாளை வெளியீடு: படக்குழு அறிவிப்பு.!

சலார் படத்தின் முதல் பாடல் ஆகாச சூரியன் நாளை வெளியீடு: படக்குழு அறிவிப்பு.!



Salaar Movie Aagaasa Sooriyan Song Out 13 Dec 2023 

 

கே.ஜி.எப் இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் இசையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம், உலகளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் டிசம்பர் 22 அன்று வெளியாகிறது. படத்தின் டிரைலர், டீசர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தன.

இத்திரைப்படம் மொத்தமாக 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடுகின்றன என்ற தகவல் நேற்று வெளியாகி இருந்தது. இந்நிலையில், சலார் படத்தில் இடம்பெற்றுள்ள ஆகாச சூரியன் என்ற பாடல், நாளை வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் நட்பு சார்ந்த பாடலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.