பிக்பாஸ் சாக்ஷிக்கு அடித்த வேற லெவல் அதிர்ஷ்டம்.! புதிய அவதாரத்தால் வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!
பிக்பாஸ் சாக்ஷிக்கு அடித்த வேற லெவல் அதிர்ஷ்டம்.! புதிய அவதாரத்தால் வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

கடந்த மூன்று மாதங்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன்3 கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதலிடம் பிடித்தார். மேலும் சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் செரின் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் வென்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் சாக்ஸி. சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கவினுடன் காதல் எனபல சர்ச்சைகளில் சிக்கினார்.
அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு பட வாய்ப்புகள் வரத்துவங்கின. மேலும் அவர் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஆக்சன் என்ற திரைப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறார். மேலும் அவர் தான் டப்பிங் செய்யும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.