"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
நான் பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன்!! பிரபல நடிகை ஓபன் டாக்கால், ஷாக் ஆன ரசிகர்கள்!!
நான் பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன்!! பிரபல நடிகை ஓபன் டாக்கால், ஷாக் ஆன ரசிகர்கள்!!

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் அதனைத் தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் சாய்பல்லவி தமிழில் கரு,மாரி2 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சாய்பல்லவி தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவான NGK என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து NGK படம் வரும் 31ஆம் தேதி ஆக உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சாய் பல்லவி பேட்டியளித்துள்ளார். அப்பொழுது அவரிடம் உங்களுக்கு கண்டவுடன் காதல் என்பதில் நம்பிக்கை உள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு அவர், பார்த்தவுடன் காதல் என்பதில் எனக்கு பெரியதாக நம்பிக்கை இல்லை.
அதே நேரத்தில் ஆண்களை விட பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன். ஏனெனில் அவர்கள்தான் வித்தியாசமான உடைகள் அணிந்திருப்பர்,வகைவகையான ஹேர்ஸ்டைலும்செய்திருப்பார்கள். அதனை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன் என கூறியுள்ளார்.