
அட.. சூப்பர்! பிரபல டாப் ஸ்டாருக்கு தங்கையாகும் நடிகை சாய் பல்லவி! யாருக்குனு பார்த்தீர்களா!!
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியளவில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மிகவும் எளிமையாக இருக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த லவ் ஸ்டோரி, ராகுல் சங்ரித்யன் இயக்கத்தில் நடிகர் நானியுடன் இணைந்து நடித்திருந்த ஷ்யாம் சிங்கா ராய் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சாய்பல்லவி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது தெலுங்கில் அண்ணன்- தங்கை கதையை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கும் படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிப்பதாகவும், அவருக்கு தங்கையாக நடிகர் சாய் பல்லவி நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதில் நடிக்க சாய் பல்லவி முதலில் தயங்கியதாகவும், ஆனால் இயக்குனர் திரிவிக்ரம் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement