கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
ஆத்தாடி இவ்வளவா? நடிகை சாய்பல்லவி கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன படக்குழு! அதுவும் எந்த படத்தில் நடிக்க தெரியுமா?

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படவாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில் அவர் அடுத்தடுத்தாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வர துவங்கியுள்ளார்.
இந்த நிலையில் மலையாளத்தில் கே.ஆர்.சச்சிதானந்தம் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் அய்யப்பனும் கோஷியும். இதில் பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும், நடிகர் பிஜூ மேனன், சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர். வெற்றியை தொடர்ந்து இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக்காக உள்ளது. தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகிர்தண்டா பட தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார்.
மேலும் தெலுங்கில் சாகர் கே.சந்திரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிருதிவிராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும், பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ராணா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அதை தொடர்ந்து பவன் கல்யாண் மனைவியாக, போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவியிடம் பேசிய நிலையில் அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இதுகுறித்து கலந்தாலோசித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறபடுகிறது.