சினிமாவிற்கு வந்த பிறகு நான் பட்ட கஷ்டம்..! நடிகை சாய் பல்லவி இம்புட்டு கஷ்டப்பட்டாரா.!Sai pallavi talks about tough moments in cinema career

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற காதாபாத்திரம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்.

மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இவருக்கு தாய் மொழியான தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. ஆனால், மாரி 2 படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறது.

Sai pallavi

தற்போது, இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இவர் ஏற்கனவே இதே இயக்குனரின் படமான ஃபிதா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் லவ் ஸ்டோரி படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.

இந்நிலையில், தனது சினிமா பயணத்தில் தான் பட்ட கஷ்டம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சாய் பல்லவி, அதில், ஃபிதா படத்தில் நடித்தபோது ஈரமான வயலில் ட்ராக்டர் ஓட்டவேண்டி இருந்தது, ட்ராக்டரையும் ஓட்டிக்கொண்டு முகபாவனைகள் வேறு செய்ய வேண்டும்.

இதனால் டிராக்டர் ஓட்டியபோது பல முறை கன்ட்ரோல் செய்ய முடியாமல் போனது. இதுவே தான் சினிமா துறைக்கு வந்ததில் இருந்து சந்தித்த கஷ்டம் என கூறியுள்ளார் சாய் பல்லவி.