தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மீண்டும் ட்ரெண்டாகும் நடிகை சாய்பல்லவி! என்ன காரணம் தெரியுமா?
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரேமம். இந்த திரைப்படம் மலையாளத்தில் வெற்றிபெற்றதோ இல்லையோ தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் அதில் நடித்த சாய் பல்லவி.
முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் அடுத்த பிரபுதேவா யார் என்ற நடன தொடரில் அறிமுகமான இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். ஆனாலும் மருத்துவதைவிட நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ப்ரேமம் திரைப்படத்தை தொடர்ந்து கரு என்ற திரைப்படத்திலும், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாரி இரண்டிலும், சூர்யாவிற்கு ஜோடியாக NGK திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய அளவில் மாபெரும் ரசிக்கற்படாலாம் உள்ளது. இந்நிலையில் சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் பயனர்கள் அவரை பாலோவ் செய்கின்றனர். இதனால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் நடிகை சாய் பல்லவி.