"இப்படி கேவலமான வேலையை பண்ணாதீங்க" கடுப்பான சாய் பல்லவி..

"இப்படி கேவலமான வேலையை பண்ணாதீங்க" கடுப்பான சாய் பல்லவி..


sai-pallavi-post-about-rumour

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் முதன்முதலில் ' பிரேமம்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து சாய்பல்லவி நடிப்பு பாராட்டை பெற்றது.

Pallavi

இப்படத்திற்கு பின்பு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தில் கதாநாயகியாக காலடியெடுத்து வைத்தார். இவ்வாறு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார் சாய் பல்லவி.

தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் கே 21 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பட பூஜை சமீபத்தில் நடைபெற்று புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Pallavi

இதனையடுத்து இப்புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் சாய் பல்லவிக்கு திருமணமா என்று இணையதளத்தில் வதந்திகளை பரப்பினார். இதற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட சாய்பல்லவி கேவலமான செயல்களை செய்யாதீர்கள் என் குடும்பமும் இதில் அடங்கியுள்ளது என்று காட்டமாக பேசியிருக்கிறார்.