சினிமா

நடிச்ச படம் தோல்வி! அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

Sai pallavai say no to balance salary

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் வந்தவர் நடிகை சாய் பல்லவி. படங்களில் நடிப்பதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் மாறி 2 படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. மாரி படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில்  தமிழில் மாரி படம் வெளியான அதே நாள் தெலுங்கில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்த Padi Padi Leche Manasu என்ற படமும் வெளியானது. படம் 28 கோடிக்கு வியாபாரம் ஆனது. ஆனால் படம் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் செய்தது.

இதனால் படத்தின் தயாரிப்பாளர் கடும் நஷ்டம் அடைந்துள்ளார். இந்நிலையில் படத்தில் நடித்ததற்காக தொகையில் ஒரு பகுதியை படம் வெளியான பிறகு தருவதாக படத்தின் தயாரிப்பாளர் சாய் பல்லவியிடம் கூறியுள்ளார். தற்போது படம் தோல்வி அடைந்தததால் தனக்கு வர வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்தை வேண்டாம் என்று சாய் பல்லவி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாய் பல்லவிக்கு இவளோ பெரிய மனசா என சினிமா உலகில் அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.


Advertisement