இந்தியா சினிமா விளையாட்டு

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகும் படம்! படத்தின் போஸ்டருக்கு டுவிட் செய்த சச்சின் டெண்டுல்கர்!

Summary:

sachin talk about friendship movie poster


அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தள்ள சச்சின் டெண்டுலகர் ஒரு சுவாரஸ்யமான பதிவை பதிவிட்டுள்ளார்.

ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சமீபத்தில் பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இப்படத்தின் போஸ்டரை கடந்த ஜீன் 5 ஆம் தேதி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

இதனையடுத்து இந்திய அணியின் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின், பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் குறித்து பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கு நட்பு இருந்தால் இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது சச்சின் அவர்களின் இந்த டூவிட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


Advertisement