செம மாஸ்.. இதைதானே எதிர்பார்த்தோம்! ஆர்ஆர்ஆர் படக் குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

செம மாஸ்.. இதைதானே எதிர்பார்த்தோம்! ஆர்ஆர்ஆர் படக் குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


rrr-movie-release-date-announced

மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாகுபலி. இப்படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவில்  முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்,  ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் அதில் தேஜா,அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் ஜனவரி 7 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்தால் இப்படம் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.