அண்ணா.. வீல் சேரில் வந்த தங்கை! ஓடி சென்று ரோஜா அர்ஜுன் செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோ!!

அண்ணா.. வீல் சேரில் வந்த தங்கை! ஓடி சென்று ரோஜா அர்ஜுன் செய்த காரியம்! கண்கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோ!!


Roja arjun in sun tv award function video viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகி வரும் தொடர் ரோஜா. இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் மற்றும் ரோஜாவாக பிரியங்கா நல்காரி நடித்து வருகின்றனர். 

ரோஜா மற்றும் அர்ஜுனாக நடித்து வரும் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் அண்மையில் சன் குடும்ப விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்பொழுது ரோஜா தொடரில் அர்ஜுனாக நடிக்கும் சிப்பு சூரியனுக்கு மனம் கவர்ந்த நாயகன் என்ற விருது வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து பேசிய அர்ஜூன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை ரசிகர் ஒருவர் அவருக்கு புகைப்படத்தினை பரிசாக அளித்தார். அப்பொழுது மேடையின் கீழே இருந்து ஊனமுற்ற ரசிகை ஒருவர் அண்ணா என அவரை அழைக்க, உடனே சிப்புசூரியன் ஓடி சென்று அப்பெண்ணை மேடைக்கு தூக்கி வந்துள்ளார். பின் அவருடன் கீழே உட்கார்ந்து பேசியுள்ளார். இந்த எமோஷனல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.