சினிமா

ரோபோ சங்கர் செய்த காரியத்தால் குவியும் வாழ்த்துக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

Summary:

Robo shanker donated one lakh for komathi

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சிமூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிமூலம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இவர் இன்று தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகராக உள்ளார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரோபோ சங்கர் செய்த காரியம் ஓன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளன்று இந்தியாவின் சார்பாக பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டது.

இதில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவ கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையில் இப்படி ஒரு பெருமையை சேர்த்துள்ளார்.

இவரது இந்த திறமையை பெருமைப்படுத்தும் விதத்தில் நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். 


Advertisement