"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
அவங்களுக்கும் குடும்பம் இருக்குதானே! வேதனையுடன் உருக்கமாக வில்லன் நடிகர் வெளியிட்ட வீடியோ!!
அவங்களுக்கும் குடும்பம் இருக்குதானே! வேதனையுடன் உருக்கமாக வில்லன் நடிகர் வெளியிட்ட வீடியோ!!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் ரியாஸ்கான் சென்னை பனையூர் ஆதித்யாராம் நகரில் தனது வீட்டின் வெளிப்புறம் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்த 10 நபர்களை ஊரடங்கில் ஏன் இப்படி கூட்டமாக நிற்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள் ரியாஸ்கானிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்பொழுது அந்த கும்பலில் இருந்த ஒருவர் ரியாஸ் கானை தாக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து நடிகர் ரியாஸ்கான் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது ரியாஸ்கான் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடந்த அனைத்தையும் கூறி,
மிகவும் வருத்தத்துடன் கைதானவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவங்க குடும்பத்திலுள்ளவர்கள் தங்களது பிள்ளைகள் கைது செய்யப்பட்டதற்கு எவ்வளவு வருத்தப்படுவார்கள். தயவுசெய்து அனைவரும் பத்திரமாக வீட்டிலேயே இருங்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் இந்த கொரோனாவை துரத்த முடியும் என ரியாஸ் கான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.