சினிமா

என்னோட சாதியவாடா தேடுறீங்க?. இந்தாங்க தெருஞ்சுக்குங்க.. கோவத்தில் வெளியிட்ட ரித்விகா!.

Summary:

rithvika angrily say about her caste


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இந்த படத்தில் நடிகர்  கார்த்திக்கின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்தவர் நடிகை ரித்விகா. அதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்திலும்  ரித்விகா நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் ரித்விகா என்ன சாதி என்று  இணையத்தில் தேடியதாக தகவல்கள் வெளியாகின. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரித்விகா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆக்ரோசமாக பதிலளித்துள்ளார். 

அவரது ட்விட்ர் பதிவில் “ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு, நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சித்தவர்களுக்கு, நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா” என்று கோபத்துடன் கூறியுள்ளார்.


Advertisement